மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(16) ஒரே நாளில் பெரியகமம் பகுதியில் உள்ள நான்கு வீடுகளில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் திருட்டு இடம்பெற்ற வீட்டில் இருந்த CCTV காணொளியை பார்வையிட்ட போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் சொந்த வீட்டுக்குள் நுழைவது போன்று நுழைந்து பொறுமையாக வீட்டை உடைத்து வீட்டில் உள்ள குளிர்பான பெட்டியில் இருந்து நீர் அருந்தி விட்டு வீடு முழுவதும் தேடுதல் மேற்கொண்டு வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை இட்டு சென்றுள்ளார்.

அதே நேரம் குறித்த நபர் அருகில் இருந்த இன்னும் ஒரு வீட்டிலும் இவ்வாறு புகுந்து அவ் வீட்டில் இருந்த தாலி உட்பட பல லட்சம் பெறுமதியான நகைகளை கொள்ளை அடித்துள்ளார்.

வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர் வெளியில் வந்து கதவை உடைத்த போது கதவில் உள்ள கை அடையாளங்களை இல்லாது செய்யும் நோக்குடன் தண்ணீரால் துடைக்கும் CCTV காட்சியும் பதிவாகியுள்ளது.

இவ்வாறு மன்னார் சாவற்கட்டு பகுதியில் நான்கு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் குறித்த வீட்டார் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here