கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து நேற்று (07.10) குதித்து தற்கொலை செய்த மாணவி மன உளைச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த மாணவியின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கடந்த யூலை மாதம்  கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழியே இந்த பாடசாலை மாணவி எனவும், இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக உயிரிழந்த மாணவியின் தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய அவர், கொழும்பில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here