புதிய ஏர்பாட்ஸ், ஐபோன் 16 சீரியஸ், ஆப்பிள் வாட்ச் 10 சீரியஸ், ஆப்பிள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை நேற்று நடைபெற்ற ஆப்பிள் ஈவென்ட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

உலகின் மிகவும் பிரபலமான ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் ஆண்டுதோறும் புதிய வகை செல்போன், வாட்ச், ஏர்பாட்ஸ் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு புதிய ஏர்பாட்ஸ், ஐபோன் 16 சீரியஸ், ஆப்பிள் வாட்ச் 10 சீரியஸ், ஆப்பிள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை நேற்று நடைபெற்ற ஆப்பிள் ஈவென்ட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற இந்த ஈவென்ட்டில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சித்தார்த்தும் அதிதி ராவும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் சித்தார்த்தும் அதிதி ராவும் ஆப்பிள் நிறுவனத்தின் CEOவான டிம் – குக் உடன் உரையாடிய புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கின்றனர். அந்தப் பதிவில், “டிம் – குக்கிற்கு நன்றி. இது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. எங்களைச் சுற்றி புதிய தொழில்நுட்பங்களும், படைப்பாற்றல்களும் இருந்தன. கடந்த இரண்டு நாட்களுமே எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலாக இருந்தது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here