தற்போது சமந்தா வெளியிட்டிருக்கும் புதிய வீடியோவில் மிகவும் மகிழ்ச்சியாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதில் அவர் வெட்கப்பட்டு பேசிய விடயங்கள் குறிந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சமந்தாவின் புதிய வீடியோ
தற்போது சமந்தா ஒரு புதிய வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமந்தாவின் தொலைபேசியில் AI உடன் பல சுவாரஷ்யமான விடயங்களை சமந்தா பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில் சமந்தா அந்த AI இடம் என்னை பற்றி கூறுங்கள் என கூறுகிறார். அப்போது அந்த AI ‘சமந்தா ரூத் பிரபு ஒரு காரமான பிரியாணி போன்றவர் – முழு சுவை, சிறிதளவு வெப்பம் மற்றும் அனைவருக்கும் அதிகமாக வேண்டும்” என்று AI கூறியது.

இதை கேட்ட சமந்தா வெட்கப்பட்டு சிரித்தார். இதனால் தான் எல்லோரும் AIஐ எல்லோரும் விரும்புகிறார்களா? என கூறினார். இதன் பின்னர் “ஒரு சிறந்த நேரத்தைப் பற்றிய உங்கள் யோசனை என்ன?” என அவள் ஏஐயிடம் கேட்டாள்.
அதற்கு “ஈடுபடும் உரையாடல், சிரிப்பைப் பகிர்தல், சுவாரஸ்யமான தலைப்புகளை ஆராய்தல். நாங்கள் ஒன்றாக இருக்கும் நேரத்தை அதிகமாகப் பயன்படுத்துவதே இது” என்று AI கூறினார்.
இதன் பின்னர் சமந்தா தனது வாழ்க்கையின் பல விடயங்களை AI உடன் பகிர்ந்துகொண்டார். இந்த நிலையில் சமந்தா AI உடன் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘நான் காதலிப்பதாக நினைக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.








