இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது.
இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இந்த முடிவை அறிவித்தார்.
கடந்த இரண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கும் தமது கட்சி ஆதரவளித்திருந்த போதிலும், 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அரசியல் பிரச்சினைகளையும் தீர்ப்பதில் தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.







