நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் விபத்தில் சிக்கியதாக காணொளியுடன் செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார்.
இவர் நடிப்பில் வெளியாகிய விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை என்றாலும் அவரின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து சினிமாவை போன்று நடிகர் அஜித்குமார், கார் ரேஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், கடந்த மாதம் துபாயில் நடந்த கார் ரேஸில் அவருடைய அணி பங்கேற்றது. அதற்கு முன்பாக நடந்த பயிற்சியில் அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இதனால் போட்டியில் இருந்து அவர் விலகினார். மாறாக அவருடைய அணி பங்கேற்று 3ஆம் இடத்தை பிடித்து கொண்டது.

மீண்டும் கார் விபத்து
இந்த நிலையில், தற்போது ஸ்பெயின்- வெலன்சியா நடந்து வரும் கார் ரேஸில் அஜித் பங்கேற்றுள்ளார். அப்போது தனக்கு முன்னால் சென்ற மற்றொரு காரை முந்துவதற்கு முயன்ற போது விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி அஜித் வெளியில் வந்துள்ளார்.
அஜித்தின் கார் விபத்துக்குள்ளாகும் போது அவரது காரில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “அஜித்தின் விடாமுயற்சி வலிமை மிக்கது. எந்த வித காயமும் இன்றி வெளியே வந்தார். ரேஸில் அவர் மீண்டும் பங்கேற்பார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.








