நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (12) பாராளுமன்றத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்கவுள்ளார்.
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ளதுடன், அங்கு ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவார். இது 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பாக அமையும்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவினால் முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நவம்பர் 13 முதல் 20 வரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 20 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
குழு நிலை விவாதம் எனப்படும் மூன்றாம் வாசிப்பு விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை 19 நாட்கள் நடைபெறும்.
2027 வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.








