சிம்ரன் அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கத்தில் திரைப்படம் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'THE LAST ONE' என பெயரிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், லோகேஷ் குமார் இதற்கு முன் மை சன் இஸ் கே மற்றும் N4 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய மை சன் இஸ் கே இதுவரை 4 விருதுகள் பெற்றுள்ளது. இந்திய உலக திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவில் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








