சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

வெளியீட்டிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது.

ஆனால் திரைப்படம் பற்றிய குறிப்பிடத்தக்க அப்டேட்கள் எதையும் படக் குழுவினர் பெரிதாக வெளியிடவில்லை.

இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்ததுடன், அது தொடர்பில் சலசலப்பு அவர்களின் விரக்தியின் அளவை மேம்படுத்தியுள்ளது.

இதனால், அறிவிக்கப்பட்ட திகதியில் வேட்டையன் திரையரங்குகளுக்கு வெளிவராது போகலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது மேலும் இந்த நிலையில் அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் “மனசிலாயோ” என்ற 1st single பாடல் எதிர்வரும் செப்‍டெம்பர் 9 ஆம் திகதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை வேட்டையன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் அறிவித்துள்ளது.

அத்துடன் திரைப்படம் முன்னதாக அறிவித்தபடி ஒப்டோபர் 10 ஆம் திகதி வெளியிடப்படும் என்பதையும் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

ஜெய் பீம் புகழ் டி.ஜே.ஞானவேல் வேட்டையன் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் போலி என்கவுன்டர்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் கூறப்படுகிறது.

அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ஜி.எம்.சுந்தர், ரோகினி மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த பிக்ஜியின் ஒரு பகுதியாக நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here