கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு யானை ஒன்றும், மற்றுமொரு யானையும் கமெராவில் பதிவாகியுள்ளன.
வீதியோர வேலியை தாண்டி இரண்டு யானைகளும் பிரதான வீதிக்கு வரும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது.
பார்வையாளர் குழுவொன்றை நோக்கி துதிக்கையை உயர்த்தி காட்டிய பின்னர் அவை வீதியை கடந்து சென்றதாக தெரிகிறது.
பின்னர் அவை வீதியின் மறுபுறத்தில் உள்ள மற்றுமொரு வீதியோர வேலியை தாண்டி அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் மறைந்து சென்றன.
பின்னர் அந்த இரண்டு யானைகளும் கும்புக்கன் ஓயாவில் நீராடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், மொனராகலை கும்புக்கனை பகுதி மக்கள், கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், காட்டு யானையுடன் கூடிய யானைக் கூட்டம் அடிக்கடி அப்பகுதிக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கின்றனர்.








