சருமத்தின் அழகை தக்க வைக்க அனைவருக்கும் ஆசை அதிகமாக இருக்கும். இதற்காக தான் பெருந்தொகையை கூட இழக்க தயாராக இருக்கின்றனர்.

சுருக்கங்கள் என்பது சருமத்தின் இறுக்கம் இல்லாததால் சருமம் சுருங்குவதால் சருமம் மந்தமாகவும், வயதானதாகவும், தேய்ந்து போனதாகவும் இருக்கும்.

சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் வயது அதிகரிப்பதற்கான அறிகுறி மட்டுமல்ல, பல காரணங்களால் வருகிறது.

மாசுபாடு, வெயிலால் ஏற்படும் பாதிப்பு, ஆரோக்கியமற்ற உணவு முறை, அதிக எண்ணெய் அல்லது துரித உணவுகளை உட்கொள்வது, சிகரெட் புகைத்தல் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் சரும ஆரோக்கியம் கெடத் தொடங்குகிறது.

இதை தடுக்க பலரும் பல வகை கெமிக்கல்களை பயன்படுத்துகின்றனர். அனால் இதற்காக சில வீட்டு வைத்தியங்கள் காணப்படுகின்றன.

இதை செய்தால் நமது முகச்சுருக்கம் நீங்கி சரும் பளிசிடும். இதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மகச்சுருக்கம் நீங்குதல்

அலோ வேரா சருமத்தை இயற்கையாக ஈரப்பதமாக்குவதைத் தவிர, சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது .

கற்றாழை ஜெல்லில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் சருமத்தின் வயதான தோற்றத்தை குறைக்கிறது. இது இறந்த தோல் செல்கள் அகற்றி புதிய செல்களை உருவாக்க உதவும்.

இதற்காக தான் கற்றாழையுடன் மஞ்சள் சேர்த்து சருமத்தில் பூச வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here