கம்பஹா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் ரூபாய் 10 மில்லியனை ஒதுக்கியுள்ளது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

42வது தேசிய மீலாத்-உன்-நபி கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமய நிறுவனங்களை வலுப்படுத்துவதும் இணக்கமான வாழ்வை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவை இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றன.

இதற்கிடையில், தேசிய மீலாத்-உன்-நபி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக “எங்கள் பள்ளிவாசலுக்கு வருக” என்ற தலைப்பிலான ஒரு நல்லிணக்க நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு பள்ளிவாசலுக்கு சென்று அதன் கலாசாரம், வரலாறு மற்றும் மத நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் விஜித ஹேரத் தனது பேஸ்புக் (Facebook) பதிவில் பொதுமக்களை இந்த முயற்சியில் பங்கேற்க அழைப்பு விட பரஸ்பர புரிந்துணர்வு, மரியாதை மற்றும் நல்லெண்ணத்தை வலுப்படுத்துவதோடு, ஒன்றிணைந்த இலங்கையை நோக்கி நல்லிணக்க பாலங்களை அமைப்பதையே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here