அரசாங்கம் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ள 70,000 மெற்றிக் தொன் அரிசியில் 10,400 மெற்றிக் தொன்களை இறக்குமதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் லங்கா சதொச மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனம் 5,200 மெற்றிக்களை இறக்குமதி செய்யவுள்ளதாக லங்கா சதொச தலைவர் டொக்டர் சமித்த பெரேரா இன்று (6) தெரிவித்துள்ளார்.

இந்த அரிசி விரைவில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாகவும், அது கிடைத்தவுடன் விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரிசி இருப்பு கொண்டு வரப்பட்ட பின்னர், லங்கா சதொச மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனம் 40,400 மெற்றிக் தொன் 20,200 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய விலைமனு கோரியுள்ளதாகவும், இங்கு ஸ்வர்ண நாடு அரிசி மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அரிசி இறக்குமதி தனியாருக்கு திறக்கப்பட்டுள்ளதால், தனியார் துறையால் இறக்குமதி செய்யப்படும் அரிசி அடுத்த சில நாட்களில் இலங்கையை வந்தடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி இறக்குமதியாளர்களின் அரிசி மாதிரிகள் பல அரச நிறுவனங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here