மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. தன்மன்பிள்ளை கனகசபை காலமானார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19)  86 வயது மூப்பால் காலமானார்.

மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த இவர், 86வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

தன்மன்பிள்ளை கனகசபை, 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டு, அதிகூடிய விருப்ப வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here