இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட இ.தொ.கா பொதுச் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், நேற்று (19) இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மையாரை சந்தித்து கலந்துரையாடினார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பில், இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளுக்கும் உறுதியான ஆதரவிற்கும் தனது நன்றியை ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மேலும், இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முக ஆதரவுகள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








