முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றைக் கோரியிருந்தார்.

எனினும் அவரது முன்பிணை கோரிக்கை கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவினால் நேற்று (20) நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here