நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று (22) கூடிய நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு இந்த தீர்மானத்தை எடுத்ததாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் அவர் மீது இவ்வாறு எதிர்க்கட்சிகளால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.








