தெல்தெனிய, பன்வில பகுதியில் உள்ள அருவி ஒன்றை பார்வையிட சென்ற 2 பாடசாலை மாணவர்கள் அதில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 15 வயதுடைய 2 ஆண் பிள்ளைகள் என தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை வேளை முடிந்ததன் பின்னர் 5 மாணவர்கள் கொண்ட குழு ஒன்று குறித்த அருவியை பார்வையிட சென்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு அவர்கள் புகைப்படம் எடுக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








