முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கை 2026 ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதற்கமைய கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ரணில் ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையில் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதனையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் கடந்த ஓகஸ்ட மாதம் 26 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here