முளைகட்டிய பயிறு வகைகள் பெரும்பாலும் சிறந்த உணவாக பார்க்கப்படுகின்றது. ஏனெனனின் இந்த வகை உணவுகளில் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.

வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ள முளைகட்டிய பயிறை சரியாகவும் பாதுகாப்பாகவும் உட்கொள்வது அவசியம்.

முளைகட்டிய பயிறு, தானியங்கள் உட்கொள்ளும் போது ஒரு சில விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

அப்படியாயின் முளைகட்டிய பயிற்றில் என்ன மாதிரியான ஆரோக்கிய பலன்கள் உள்ளன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. முளைகட்டிய உணவுகளில் எளிதாக பாக்டீரியா பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால் சாப்பிட முன்னர் குளிர்ந்த நீரால் நன்றாக கழுவி விட வேண்டும்.

2. தண்ணீர் மற்றும் வினிகர் இரண்டையும் கலந்து முளைகட்டிய பயிற்றை நன்றாக ஊற வைக்க வேண்டும். இப்படி செய்தால் பாக்டீரியாக்களின் தாக்கம் குறைவாக இருக்கும்.

3. முளைகட்டும் பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்த பின்னரே மற்றை தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதன் மூலமும் பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்பு உள்ளது.

4. முளைகட்டிய பயிறு வகைகள் சாப்பிடுபவர்களுக்கு செரிமானத்துடன் தொடர்பான நோய்கள் வருவது குறைவாக இருக்கும்.

5. கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் ஆன்டிநியூட்ரியண்ட்கள் ஆகியவற்றை உடலுக்கு இலகுவாக உறிஞ்சப்படுகின்றது. நொதிகளின் உற்பத்தி சீராக இருப்பதால் குடல் ஆரோக்கியம் மேம்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here