மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.

துன்னாலை கிழக்கு, குடவத்தனை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய 6 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணுக்கு கடந்த 3 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 4 ஆம் திகதி மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அன்றிரவே மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (05) உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here