மேகா ஆகாஷ், அவரது காதலன் சாய் விஷ்ணுவை இருவீட்டாரின் வாழ்த்து மழையுடன் திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் திருமணம் சென்னை, திருவான்மியூரிலுள்ள ஶ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் மண்டபத்தில் நேற்று (செப்டம்பர் 15ம் திகதி) காலை 11 மணிக்கு நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு இருவருக்கும் சத்தமில்லாமல் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்ததுடன் தற்போது இருவருக்கும் இனிதே திருமணமும் முடிவடைந்துள்ளது.
மேகா ஆகாஷின் அம்மா கேரளா, அப்பா தெலுங்கு, மாப்பிள்ளை சாய் விஷ்ணு தமிழ் என்பதால் தமிழ், கேரளா, தெலுங்கு கலப்பு முறையில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

செண்டை மேளம், தவில், நாதஸ்வரம் ஒருபுறம் ஒலிக்க இருவரும், இருவீட்டாரின் வாழ்த்து மழையுடன் திருமணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








