சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனஞ்சய டி சில்வா தலைமையிலான இந்த குழாமில் திமுத் கருணாரத்ன, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஓஷத பெர்னாண்டோ அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வெண்டர்சே மற்றும் மிலான் ரத்னநாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (18.09) காலியில் ஆரம்பமாகவுள்ளது.








