மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகளை கடத்தியதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (01)  மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை வடக்கு, மங்கல வீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் களுத்துறை வடக்கு பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 10,550 போதை மாத்திரைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்டப்டுள்ளன.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here