Saturday, June 13, 2026
No menu items!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்

கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஐந்து ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் என மொத்தம் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள்...

போலியான பொலிஸ் சீருடையில் கொள்ளை முயற்சி: 4 பேர் கைது!

போலியான பொலிஸ் சீருடைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சீருடைகளை அணிந்து வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் குறித்த வீட்டிற்கு சென்று, அங்கு சோதனையிடுவதாக கூறி வீட்டினுள் நுழைவது அங்கிருந்த சிசிரிவியில் பதிவாகியிருந்தது. இதன்போது, பிரதேசவாசிகள் குறித்த சந்தேகநபர்கள் வந்த வேனை சுற்றி வளைத்த நிலை​யில், கொள்ளையர்கள் சிசிரிவி பதிவு...

சப்ரகமுவ மாகாணத்தில் விசேட சோதனை ;120 பேர் கைது!

சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று (6) முன்னெடுக்கப்பட்டது. எம்பிலிப்பிட்டிய, சீதாவகபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 19 பேரும்...

மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகளை கடத்திய இளைஞன் மடக்கி பிடிப்பு..!

மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகளை கடத்தியதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (01)  மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை வடக்கு, மங்கல வீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் களுத்துறை...

காரில் சட்டவிரோத சிகரட்டுக் கடத்தல் – மடக்கி பிடித்த பொலிஸார்..!

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளை காரில் கடத்திச் சென்ற சந்தேக நபர்  ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 12...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

மாத்தளை - தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலோகஹஎல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை (02/04/2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புள்ளை கண்டலம் பிரதேசத்தில் வசிக்கும் ...

சட்டவிரோத சிகரட்டுகளுடன் சிக்கிய இளைஞன்..!

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (24/02/2025) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் திருகோணமலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்தில்...

கஞ்சா போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேகநபர்..!

மொனராகலை, செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹகம ஜனபதய பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) கைது செய்யப்பட்டுள்ளதாக கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு  நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை, செவனகல பிரதேசத்தில்...

பல்லாயிரக்கணக்கான கஞ்சா செடிகள் கைப்பற்றல்..!

அம்பாந்தோட்டை, தம்மென்னாவ வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16.02.2025) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது  8,516 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு  நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

STF இன் புதிய கட்டளைத் தளபதி நியமனம்..!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தர, அஜித் ரோஹன மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் எதிர்வரும் 12ஆம் திகதி இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இந்நிலையில், டி.ஐ.ஜி. டி.ஜி.எஸ். டி சில்வா பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் STF இன் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img