யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 20 கிலோ 175 கிராம் கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ், வளைவுக்கு அருகில் இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுவதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த அதிரடிப்படையினர் மேற்படி இளைஞரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வவுனியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருளுடன், கைது செய்யப்பட்ட இளைஞர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here