அனுராதபுரம் மல்வத்து ஓயா புதிய பாலத்திற்கு அருகில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சின்ஹ தூணுக்கு அருகில் புதிய மல்வத்து பாலத்தின் கீழ் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இறந்தவர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஜெயவீரவின் மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.








