யாழ் இளவாலை பகுதியில்47 வயதுடைய ஐயங்கன் சிவானந்தராஜா குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்களை விட்டு பிரிந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து குறித்த குடும்பஸ்தர் நேற்றையதினம்(29) சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் அதிக மதுப் பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here