யாழ்ப்பாணம் புகையிரதநிலையத்தை தூய்மையாக்கும் பணி இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ் மாவட்ட சாரணர் இயக்கத்தின் பங்களிப்பில் குறித்த தூய்மையாக்கல் பணியானது இன்று காலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பிரட்லி, யாழ் புகையிரத நிலைய பிரதம அதிபர் சுரேந்திரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வருணன், சேவ் த லைப் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ராகுலன் மற்றும் சாரணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


யாழ்ப்பாணம் புகையிரதநிலையத்தில் தூய்மையாக்கல் பணியை ஆரம்பித்த சாரணர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திலும் சாரணர்கள் தூய்மையாக்கல் பணியில் ஈடுபட்டனர்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








