இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இன்டிகோ அதன் 18வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இன்டிகோ தனது சர்வதேச பாதை வலையமைப்பில் புதியதாக வட இலங்கையின் யாழ்ப்பாணத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே தினசரி சேவையை தொடங்கவுள்ளதாக இன்டிகோ அறிவித்துள்ளது.

இலங்கையில் கொழும்புக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடமாக யாழ்ப்பாணத்திற்கான சேவையை இன்டிகோ அறிவித்துள்ளது.

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகமான மற்றும் சிறந்த சர்வதேச சுற்றுலாத் தலமாக இலங்கை பார்க்கப்படுவதன் பின்னணியில் இன்டிகோவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், யாழ்ப்பாணம் செல்வதற்கான ஆர்வமும் இந்திய பயணிகளின் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இன்டிகோ யாழ்ப்பாணத்திற்கான சேவையை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here