வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
காலை 08.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது.
பிள்ளையார், முருகப்பெருமான், வள்ளி – தெய்வானை மூஷிகம், மயூரம், அன்னம் ஆகிய மூன்று தங்க வாகனங்களில் உள்வீதி உலா வந்து காட்சியளித்தனர்.



(யாழ் நிருபர்- லோஜன் விஜய்குமார்)







