கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை அழகுபடுத்தும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன் கலந்துகொண்டிருந்தார்.

வேலைத்திட்டத்தில் இராணுவத்தினர், பொலிஸார், இலங்கை போக்குவரத்து சபையினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இனிவரும் காலத்தில் பேருந்து நிலையத்தில் விளம்பரங்களை ஒட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here