பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் நியமனம் அரசியலமைப்பின் பொருந்தக்கூடிய விதிகளுக்குள் இல்லை என்பதாலே பொலிஸ் மா அதிபர் தனது அலுவலக செயற்பாடுகளில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளார்.

“ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியாது. ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் என்பதற்காக அவர் தனது பொறுப்புகளில் இருந்து விலக முடியாது. அவரால் இதைச் செய்ய முடியாவிட்டால், ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள்” என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here