ஹபராதுவை பொலிஸ் பிரிவின் கொக்கல பகுதியில் உள்ள ரயில் கடவை ஒன்றில் இன்று (25) பகல் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை 9 சிறுவர்கள் காலி – கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்தார்.
இந்த குழந்தைகளில் இருவர் பிரதேசவாசிகளால் வேறு வாகனங்களில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மேலும் 7 குழந்தைகள் அவசர ஊர்திகள் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 14 வயதுடைய சிறுவர் ஒன்றும் அடங்குவதாகவும், குறித்த சிறுவரின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சத்திரசிகிட்சை இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சிறுவரின் நிலை சற்று கவனம் செலுத்தும் நிலையில் இருந்தாலும், அவருக்கு மிகவும் கவலைக்கிடமான நிலை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய சிறுவர்களை பொறுத்தவரை, இதுவரை மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை அறிக்கைகளின்படி அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.








