சங்கீதா கிங்ஸ்லிக்கு குழந்தை பிறந்து விட்டதாக புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கிங்ஸ்லி- சங்கீதா

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.

இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘கோலமாவு கோகிலா” என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.

இதற்கிடையில், கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தம்பதிகளாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

 குழந்தை பிறந்தாச்சு..

இந்த நிலையில், ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சங்கீதா அவ்வப்போது கணவருடன் எடுத்து கொள்ளும் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம்.

அந்த வகையில், குழந்தையை கிங்ஸிலி கையில் ஏழ்ந்தியவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here