”லிட்டில் ஹார்ட்ஸ் ”  இணைய  பணமோசடி தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  குற்றப் புலனாய்வுபிரிவு தெரிவித்துள்ளது.

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்துறைப் பகுதியிலும், நரோவ்வலய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரம்ப பகுதியிலும் இணையத்தின் மூலம் ”லிட்டில் ஹார்ட்ஸ் ” என்ற போலிக் கணக்கைத் திறந்து பணம் தருவதாகவும், ”ஹார்மிண்டேஷன்” கணக்கைத் திறந்து பணப்பரிசு வழங்குவதாகவும் கூறி 29 இலட்சம் ரூபாவை மோசடி செய்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ,  நொச்சிகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான சேனாதிரகே துலான் மஹேஷித மற்றும் பலவியா பகுதியைச் சேர்ந்த  23 வயதான மாணிக்குகே சந்தருவன் சில்வா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான சேனாதிரகே துலான் மஹேஷித, சமூக ஊடக ஆர்வலர் என குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரையும்  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணைய ஊடுருவல் மற்றும் புலனாய்வுப் பிரிவு கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here