Thursday, July 23, 2026
No menu items!

சந்தேகநபர்கள்

மட்டக்களப்பில் தொல்லியல் அறிவிப்புப் பலகைகள் அகற்றம் — விசாரணைகள் தீவிரம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த தொல்லியல் அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்ட சம்பவத்திற்காக, வாழைச்சேனை பிரதேச சபை தலைவர் உட்பட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளன. பொலிஸார் தெரிவித்ததின்படி, சம்பவத்துக்கு தொடர்புடைய சந்தேகநபர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதற்கிடையில், நேற்று (நவம்பர் 24) வாழைச்சேனை, கிரான் பகுதியில் 53 வயதுடைய ஒருவர்...

கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஐந்து ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் என மொத்தம் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள்...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு – முக்கிய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது நடத்திய நடவடிக்கையில், இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மற்றும் நேபாள பொலிஸார் இணைந்து செயல்பட்டதாக விசாரணைத் தரப்புகள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது நேபாள காவல்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர். இலங்கைக்கு...

நாடு முழுவதும் விசேட பொலிஸ் நடவடிக்கை: ஒரு நாளில் 736 பேர் கைது!

நாடு முழுவதும் நேற்று (18) நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் போது, 736 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைகள், நாட்டின் அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. இதற்காக மொத்தம் 28,705 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 50...

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய 3 சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி...

போலியான பொலிஸ் சீருடையில் கொள்ளை முயற்சி: 4 பேர் கைது!

போலியான பொலிஸ் சீருடைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சீருடைகளை அணிந்து வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் குறித்த வீட்டிற்கு சென்று, அங்கு சோதனையிடுவதாக கூறி வீட்டினுள் நுழைவது அங்கிருந்த சிசிரிவியில் பதிவாகியிருந்தது. இதன்போது, பிரதேசவாசிகள் குறித்த சந்தேகநபர்கள் வந்த வேனை சுற்றி வளைத்த நிலை​யில், கொள்ளையர்கள் சிசிரிவி பதிவு...

பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்!

பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதுள்ளது. இச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு; 3பேர் கைது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பந்துல பிரசன்ன என்ற நபரை இலக்கு வைத்து கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கி...

கல்கிஸை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூலுதாகொட வீதியில் பாழடைந்த காணியொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல்மாகாண தெற்கு குற்றவியல் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (04) சந்தேகநபர்கள் மூவர் கொட்டாவ பொலிஸ் பிரிவின் மாக்கும்புர பல் ​போக்குவரத்து நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள்...

தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை..!

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த சந்தேகநபர்கள்...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img