இந்திய தரப்பினரின் பின்னணியிலேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் உரிமைகள் சார்ந்து நேர்மையாக இருக்கின்ற ஒரே தரம்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியே என தெரிவித்துள்ள செ.கஜேந்திரன் வட கிழக்கு தமிழர்கள் முற்றாக ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாகாண சபையின் ஆட்சி நிறைவடைந்தவுடன் உடன் தேர்தலை நடத்தாமல் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து தாமதப்படுத்திய சுமந்திரன் தற்போது மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என கூறுகின்றார். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.








