வடமாகாணத்தில் பரீட்சை உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களிடம் இருந்து பணம் அறவிடும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாகாண ஆளுநரிடம் முன்வைத்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here