சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.
உக்ரேன் – ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறும் மோதல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் வரிவிதிப்பு கொள்கை ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தூய தங்கம் 3000 அமெரிக்க டொலரை அண்மித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 2942 அமெரிக்க டொலர் முதல் 2940 அமெரிக்க டொலர் வரை தங்கத்தின் விலை காணப்படுகிறது.








