வருமான வரிக்காக பதிவு செய்தவர்கள் 2025, 2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதன் மூலம் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க முடியும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2025, 2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான தமது வருமான வரி அறிக்கைகளை இணையம் (ஒன்லைன்) முறையில் சமர்ப்பிக்க முடியும்.

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பது தொடர்பில் மேலதிக தகவல் அல்லது விளக்கம் தேவைப்பட்டால் 1944 என்ற அவசர அழைப்பு எண்ணின் மூலம் தகவல்களைப் பெறலாம் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://WWW.IRD.GOV.LK மூலமும் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here