ஹோமாகம பொலிஸ் பிரிவின் மாவத்தகம பகுதியில், இணையத்தில் வாகனங்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்டு தருவதாகக் கூறி நபர்களை ஏமாற்றி பண மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (14) இரவு மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் நடத்திய விசாரணையின் போது சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 21 வயதுடைய மாவத்தகம, ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர்.
இந்த சந்தேக நபர், ஃபேஸ்புக் வர்த்தக கணக்கின் மூலம் வாகனங்களை விற்றுத் தருவதாகவும், அதற்காக ஒரு வாரத்திற்கு 5,000 ரூபாய், இரண்டு வாரங்களுக்கு 10,000 ரூபாய், ஒரு மாதத்திற்கு 15,000 ரூபாய் என பணம் செலுத்த வேண்டும் என தொலைபேசி மூலம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் பணத்தைப் பெற்றுக்கொண்டு விளம்பரங்களை வெளியிடாது, நபர்களிடமிருந்து பண மோசடி செய்து குற்றவியல் நம்பிக்கை மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் போன்ற குற்றங்களை புரிந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மத்திய குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








