Tuesday, July 28, 2026
No menu items!

அஸ்வெசும கொடுப்பனவு

வறிய குடும்பங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்படும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களில் வறிய குடும்பங்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் நான்கு பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இதனூடாக 16 இலட்சம் பேர் நன்மைகளை பெற்றனர். எனினும் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் அதன் நான்காவது பிரிவை சேர்ந்த 315,000 பயனாளிகளுக்கு...

வைப்பிலிடப்படவுள்ள இந்த மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு!

இந்த மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. 17 இலட்சத்து 32 அயிரத்து 263 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் சுமார் 12.6 பில்லியன் ரூபாய் கொடுப்பனவு வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பயனாளிகள் நாளை முதல் அஸ்வெசும கொடுப்பனவை வங்கிக் கணக்கிலிருந்து பெறமுடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.  

அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவு இன்று..!

இம் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் (2/13/2025) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு அவர்களின் வங்கிக் கணக்குகளில் இன்று வரவு வைக்கப்படவுள்ளது. இதற்காக 12.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்..!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று (1/21/2025) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக 8 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கு, அவர்களின் வீடுகளுக்குச் சென்று தகவல் கணக்கெடுப்பை முன்னெடுப்பதற்குத்...

குழந்தைகளுக்கு அஸ்வெசும கொடுப்பனவு – அமைச்சரவை அங்கீகாரம்..!

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் 6,000 ரூபா கொடுப்பனவு, வவுச்சர் வடிவில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளி தாய் அல்லது தந்தை உள்ள குடும்பங்களின் குழந்தைகள், அநாதை இல்லங்களில் படிக்கும் சிறு பிள்ளைகள் மற்றும் சிறப்புக் காரணங்களால் ஆதரவற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதேவேளை,...

வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடவுள்ள அஸ்வெசும நிலுவைத் தொகை …!

அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் நிலுவைத் தொகையை வைப்பிலிடவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும கொடுப்பனவின் முதலாம் கட்டத்தின் கீழ் 212,000 423 குடும்பங்களுக்காக இதுவரை செலுத்தப்படாத நிலுவைத் தொகையை வைப்பிலிடவுள்ளதாக சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். 1314 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட...

பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றது – ஜோசப் ஸ்டாலின்

பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றதென ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு தேவையுடையோரின் பிள்ளைகளுக்கும் 6,000 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதை விட, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும் என அந்த சங்கங்கள்...

வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவு வரவு-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

இந்த மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 177,311 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவு வரவு வைக்கப்படவுள்ளது. அஸ்வெசும கொடுப்பனவுக்காக ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த...
- Advertisement -spot_img

Latest News

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவு

சீனாவின் வடமேற்கு கிங்காய் மாகாணத்தின் சிங்காய் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. முதலாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. இது காலை...
- Advertisement -spot_img