வவுனியா மாவட்டத்தின் நகர சபை செயலாளரின் உத்தரவின்படி வைத்தியசாலை மற்றும் இலுப்பையடி பகுதிகளில் விதிகளை மீறி அமைத்திருந்த சட்டவிரோத சாலையோர கடைகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றையதினம்(16) வவுனியா கொரவபொத்தானை பள்ளிவாசலின் சுற்றுவட்ட பகுதியில் அமைந்திருந்த சாலையோரக்கடைகளும் நீக்கப்பட்டுள்ளன.
இதற்கான மாற்று இடங்கள் வவுனியா பிரதேச சபையால் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.








