யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் தமிழர் திருநாளாம் தமிழ் பண்டிகையை முன்னிட்டு, வவுனியா மாவட்டம் கணேசபுரம் திருமூலர் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் 45 குடும்பங்களுக்கும், கணேசபுரம் ஶ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் 42 குடும்பங்களுக்கும், வவுனியா புளியங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் 43 குடும்பங்களுக்கும் தலா, 2500 பெறுமதியில் ரூபா ஒவ்வொரு பொதியும் தலா 2500 ரூபா பெறுமதியில் 130 குடும்பங்களுக்குமாக மொத்தம் 325000 செலவில் வழங்கிவைக்கப்பட்டன.


இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமம் யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்துக்கு 500,000 ரூபாவில் தைப்பொங்கலுக்கான உதவிகளை யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, 320 விழிப்புலனற்ற குடும்பங்களுக்கு சனிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் யோ.சுதாகரன் தலைமையில் அதன் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
[ரட்னசிங்கம் – முரளிதரன்]








