களுத்துறை, பயாகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மக்கொன – முங்ஹேன வீதியில் குமாரகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முங்ஹேனவிலிருந்து மக்கொன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மண்மேட்டில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மக்கொன பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here