கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு இன்றையதினம் (2/27/2025) ஆரம்பமாகியது.
இலங்கை தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனமும் வடமாகாண விளையாட்டுத் திணைக்களமும் குறித்த செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளன. குறித்த செயலமர்வில் விளையாட்டு, மருத்துவம் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் இன்றும் நாளையும் குறித்த செயலமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








