ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் என்ன முடிவு செய்துள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி

கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.

இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் இவரின் சினிமா வாழ்க்கை அத்தோடு ஆரம்பித்தது.

இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை பெற்றோர்கள் சம்பதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையொன்று இருக்கின்றது.

இந்த நிலையில் சமிபத்தில் GV பிரகாஷ்- சைந்தவி இருவரும் தனித்து வாழப்போவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.

விவாகரத்து

இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து கடந்த 11 வருடங்களாக திருமண வாழ்க்கையில் இருந்த இருவருக்கும் என்ன நடந்தது? என சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு எழுந்தது.

அந்த வரிசையில், ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதிகளின் விவாகரத்து குறித்து ஜி.வி.பிரகாஷ் மனந்திறந்து பேசியுள்ளார்.

அதாவது, விவாகரத்துக்கு பிறகும் ஜீ.வி மற்றும் சைந்தவி இருவரும் ஒன்றாக பணியாற்றுவது ஆச்சர்யமாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வரும் நிலையில் அது ஏன் என ஜீ.வி.பிரகாஷே பதில் அளித்து இருக்கிறார்.

“நாங்கள் ரொம்ப professional. ஒருவருக்கொருவர் மீது மரியாதையும் இருக்கிறது. அந்த மரியாதைக்காக நாங்கள் ஒன்றாக பணியாற்றுகிறோம்” என ஜீ.வி கூறி இருக்கிறார்.

நீதிமன்ற முடிவு

மேலும் இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்த போது, ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினார்கள். இருவரும் மனதார பிரிவதாக கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here