முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான விவாதத்தின்போது தான் தூங்கிவிட்டதாக ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது ஜோ பைடன் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததுடன் பல விமர்சனங்களுக்கும் ஆளானார்.

இந்நிலையில், டிரம்ப் உடனான விவாத நிகழ்ச்சியின்போது கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்களால் சரியான ஓய்வு இல்லாமையினால் விவாத மேடையில் கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

எனது அதிகாரிகள் கூறியதையும் நான் கேட்கவில்லை. நான் விவாத நிகழ்ச்சியில் சரிவர செயல்படவில்லை. அதற்கு நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here