நாட்டின் சில மாவட்டங்களில் நாளை வெப்பமான காலநிலை நிலவும் என திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (16) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (17) செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் பகல் நேரத்தில் (Heat Index) அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறும், போதுமான நீர் அருந்துவது உள்ளிட்ட சுகாதாரமான முறைகளை பின்பற்றுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.








